/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜூலை 9ம் தேதி பந்த்: சி.ஐ.டி.யூ.,தீர்மானம்
/
ஜூலை 9ம் தேதி பந்த்: சி.ஐ.டி.யூ.,தீர்மானம்
ADDED : ஜூன் 27, 2025 05:13 AM

புதுச்சேரி:புதுச்சேரி சி.ஐ.டி.யூ., மாநிலக்குழு கூட்டம், தலைவர் பிரபுராஜ் தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடந்தது.
செயலாளர் சீனுவாசன், பொருளாளர் ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். அமைப்பு சாரா தொழிலாளர் சமூக பாதுகாப்பு வாரியம், தற்போது புதுச்சேரி அரசால் இயற்றப்பட்டிருக்கும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு வாரியத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வந்து செயல்படுத்த வேண்டும்.
தொழிலாளர் துறையால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதிய சட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மத்திய - மாநில அரசுகளின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, கொள்கைகளை கைவிட வலியுறுத்தி புதுச்சேரியில் வரும் ஜூலை 9ம் தேதி நடைபெற உள்ள அனைத்து தொழிற்சங்க அறைகூவலான பந்த் போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில செயலாளர் சீனுவாசன் நன்றி கூறினார்.