நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : உருளையான்பேட்டை அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் அருண்பிரசாத், 27. புதுச்சேரி தொழில்நுட்ப கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
இவர் நண்பருக்கு சொந்தமான பி.ஒய்.01.சி.டி.9258 பதிவு எண் கொண்ட விலை உயர்ந்த பைக்கை, கடந்த மாதம் 13ம் தேதி இரவு 10:00 மணியளவில், வீட்டு வாசலில் பூட்டி விட்டு துாங்கச் சென்றார். மறுநாள் காலையில் பார்த்தபோது பைக் காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில், உருளையான்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.