/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
2026 தேர்தலில் நுாறு சதவீதம் வெற்றியே இலக்கு; பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா பேச்சு
/
2026 தேர்தலில் நுாறு சதவீதம் வெற்றியே இலக்கு; பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா பேச்சு
2026 தேர்தலில் நுாறு சதவீதம் வெற்றியே இலக்கு; பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா பேச்சு
2026 தேர்தலில் நுாறு சதவீதம் வெற்றியே இலக்கு; பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா பேச்சு
ADDED : ஜூலை 01, 2025 02:47 AM
புதுச்சேரி : வரும் 2026 தேர்தலில் ராமலிங்கம் தலைமையில் 100 சதவீதம் வெற்றி பெறும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா பேசினார்.
பா.ஜ., மாநில தேர்தல் பிரகடனம் மற்றும் மாநில தலைவர் பதவியேற்பு விழாவில், புதுச்சேரிக்கான பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா பேசியதாவது;
பா.ஜ., கூட்டங்களில் 2026 என்கிறோம். அப்படி என்றால் என்ன. பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு ஆண்டிற்கு ஒரு தேர்வு நடைபெறும். அரசியல் கட்சிகளுக்கு 5 ஆண்டிற்கு ஒரு தேர்வு வரும். அந்த தேர்வில் கடந்த மூன்று முறை நாம் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றோம். வரும் தேர்வில் நாம் 'ரேங்கில்' வர நமக்கு ஒரு தலைவர் வேண்டும். அவர்தான் ராமலிங்கம். அவரது பெயர் அனைத்து தரப்பில் இருந்தும் ஒருமித்த குரலாக வந்தது.
கடந்த தேர்தலில் 9 தொகுதிகளில் போட்டியிட்டு 6 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். வரும் தேர்தலில் ராமலிங்கம் தலைமையில் நாம் 12, 13 அல்லது 15 தொகுதிகளில் நின்றாலும் 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும்.
நியமன எம்.எல்.ஏ.,க்கள் மூவரிடம், நீங்கள் 4 ஆண்டு பதவியில் இருந்துவிட்டீர்கள், அடுத்த மூவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்றதும், பதில் ஏதும் கூறாமல் மூவரும் ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர்.
அந்த பதவிகளை யாருக்கு கொடுக்கலாம் என ஆலோசனை நடத்தினோம். அதனடிப்படையில் மூத்த நிர்வாகி செல்வம் பெயரை கூறியதும், யாரும் ஆட்சேபனை தெரிவிக்காமல் வரவேற்றனர். அதேபோன்று, காரைக்கால் ராஜசேகர். அடுத்ததாக கடந்த தேர்தலில் வாய்ப்பு கொடுக்காவிட்டாலும், கடுமையாக பணியாற்றி ஊசுடு தொகுதியில் சாய்சரவணன் குமாரை வெற்றி பெற வைத்தார். அவருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
அதேபோன்று சாய்சரவணன்குமாரிடம், ஜான்குமாருக்கு அமைச்சர் வாய்ப்பு தரலாமா எனக் கேட்டோம். உடன் அவர் கடவுளை வணங்கிவிட்டு, ராஜினாமா கடிதம் கொடுத்தார். இதுபோன்ற கட்டுப்பாடான கட்சியில் நாம் உறுப்பினர்களாக உள்ளோம்.
கடந்த 2020ல் நான் இங்கு வந்தபோது, பா.ஜ., எங்கு உள்ளது என காங்., கட்சியினர் கேட்டனர். அந்த காங்., இன்று எங்கு இருக்கிறது என்று தேடும் நிலைக்கு ஆளாக்கியவர்கள் நீங்கள். அந்த நிலைக்கு கொண்டு வந்தவர்கள் நீங்கள். நான் உங்களோடு இருப்பேன். வரும் 2026 தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறும் வகையில் ஒன்றாக பணியாற்றுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.