/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிராம சபை கூட்டங்கள் புறக்கணிப்பு
/
கிராம சபை கூட்டங்கள் புறக்கணிப்பு
ADDED : ஜன 27, 2024 06:37 AM
பாகூர் : பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மணப்பட்டு கிராமத்தில் குடியரசு தினத்தையொட்டி, கிராம சபை கூட்டம் அரசு நடுநிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.
கூட்டத்தில், உள்ளாட்சித் துறை, சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை ஆகிய துறை அதிகாரிகள் மட்டுமே வந்திருந்தனர். அரசின் ஆணைப்படி மற்ற 23 துறை அதிகாரிகள் வராததால் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கைகள் பற்றி விவாதிப்பதற்கும், தீர்மானம் நிறைவேற்றுவதற்கும் விருப்பம் இல்லை எனக் கூறி, பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர்.
இதேபோல், பாகூர் கிழக்கு கிராம சபை கூட்டத்தில், அனைத்து துறை அதிகாரிகள் வரவில்லை எனவும், கடந்த கால கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும் கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் வெளியேறினர்.
இதனால், அக்கிராமங்களில் பரபரப்பு நிலவியது.

