/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தாயிடம் தகராறு செய்த தம்பி அடித்துக் கொலை; போலீசில் அண்ணன் சரண்
/
தாயிடம் தகராறு செய்த தம்பி அடித்துக் கொலை; போலீசில் அண்ணன் சரண்
தாயிடம் தகராறு செய்த தம்பி அடித்துக் கொலை; போலீசில் அண்ணன் சரண்
தாயிடம் தகராறு செய்த தம்பி அடித்துக் கொலை; போலீசில் அண்ணன் சரண்
ADDED : ஜன 26, 2024 12:19 AM

வில்லியனுார் : குடிக்க பணம் கேட்டு தாயிடம் தகராறு செய்த தம்பியை, அடித்து கொலை செய்த அண்ணன் போலீசில் சரணடைந்தார்.
புதுச்சேரி, ஏம்பலம் அடுத்த தனிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன் மகன்கள் வெங்கடேசன்,37; கல்யாணசுந்தரம்,35; வெங்கடேசன் திருமணமாகி அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.
பெயிண்டரான கல்யாணசுந்தரத்தின் குடிப்பழக்கத்தால், அவருடன் சேர்ந்து வாழ்ந்த பெண் பிரிந்து சென்றுவிட்டார். இதனால், தனது தாய் ஆதிலட்சுமியுடன் வசித்து வந்த கல்யாணசுந்தரம், கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் குடிக்க பணம் கேட்டு, தாய் ஆதிலட்சுமியிடம் தகராறு செய்து வந்தார். இதுகுறித்து ஆதிலட்சமி நேற்று அதிகாலை, தனது மூத்த மகன் வெங்கடேசனுக்கு மொபைல் போனில் தெரிவித்தார்.
அதனையொட்டி நேற்று காலை 8 மணிக்கு தாய் வீட்டிற்கு சென்ற வெங்கடேசன், அங்கிருந்த கல்யாணசுந்தரத்திடம், அம்மாவிடம் ஏன் தகராறு செய்கிறார் என கேட்டார். அதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, கல்யாணசுந்தரம், வெங்கடேசனை தாக்கினார்.
ஆத்திரமடைந்த வெங்கடேசன் அருகில் கிடந்த தடியால் கல்யாணசுந்தரம் தலையில் தாக்கினார். அதில், அவர் சுருண்டு விழுந்து இறந்தார். திடுக்கிட்ட வெங்கடேசன் மங்கலம் போலீசில் சரணடைந்து விபரத்தை கூறினார்.
அதனைத் தொடர்ந்து எஸ்.பி., வம்சிதரெட்டி, இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப் இன்ஸ்பெக்டர் சண்முகசத்யா மற்றும் போலீசார் விரைந்து சென்று, கல்யாணசுந்தரம் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து வெங்கடேசனிடம் விசாரித்து வருகின்றனர்.

