Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் நாளை துவங்குகிறது

பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் நாளை துவங்குகிறது

பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் நாளை துவங்குகிறது


ADDED : பிப் 18, 2024 05:04 AM

Follow on Google

ADDED : பிப் 18, 2024 05:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் பி.எஸ்.என்.எல்., சிறப்பு விற்பனை முகாம் நாளை துவங்குகிறது.

புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., முதன்மை பொது மேலாளர் செய்திக்குறிப்பு:

புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., சிறப்பு விற்பனை முகாம் நாளை 19ம் தேதி துவக்கி 21ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது.

முகாம் மேட்டுப்பாளையம், முதலியார்பேட்டை தபால் நிலையம், வில்லியனுார், திருக்கனுார், பாகூர், லாஸ்பேட்டை செயின்பால் பேட் சந்திப்பு, திருச்சிற்றம்பலம் பஸ்டாண்ட், கோட்டக்குப்பம், கரியமாணிக்கம், புதுச்சேரி ரங்கப்பிள்ளை வீதி பொது தொலைபேசி அலுவலகம் அருகில் நடக்கிறது.

முகாமில் வாடிக்கையாளர்கள் தங்களுடைய தற்போதைய எண்ணை மாற்றாமல் அதிவேக எப்.டி.டி.எச்., தொழில்நுட்பத்திற்கு லேண்ட்லைன் எண்ணை இலவசமாக மாற்றிக்கொள்ளலாம். இதற்கான மோடம் இலவசம்.

புதிய எப்.டி.டி.எச்., இணைப்பு ரூ.329 முதல் மற்றும் கிராமப்புறங்களில் ஆறு மாதங்களுக்கு ரூ.999 கிடைக்கும். 269 ரூபாய் மதிப்புள்ள சிம் கார்டு 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த சிம் கார்டில் 45 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜி.பி., டேட்டா, அளவில்லா அழைப்புகள்,100 எஸ்.எம்.எஸ்., இலவசம்.

பிற நெட் ஒர்க்கில் இருந்து எம்.என்.பி., மூலம் பி.எஸ்.என்.எல்.,க்கு வருபவர்களுக்கு 269 ரூபாய் மதிப்புள்ள சிம் கார்டு முற்றிலும் இலவசம். 2ஜி, 3ஜி சிம் வைத்திருப்பவர்கள் இலவசமாக 4ஜி சிம்மிற்கு மேம்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap