/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வேளாண் வளர்ச்சிக்கான பிரசார இயக்கம் நிகழ்ச்சி
/
வேளாண் வளர்ச்சிக்கான பிரசார இயக்கம் நிகழ்ச்சி
ADDED : ஜூன் 02, 2025 01:10 AM

நெட்டப்பாக்கம்: புதுச்சேரி வேளாண்துறை மற்றும் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் வேளாண் வளர்ச்சிக்கான பிரசார இயக்கம் நிகழ்ச்சி கரியமாணிக்கத்தில் நேற்று நடந்தது.
கரியமாணிக்கம் வேளாண் அலுவலர் திருநாடன் வரவேற்றார். பாகூர் கோட்ட வேளாண் துணை இயக்குனர் குமரவேல் தலைமை தாங்கினார். வேளாண் அறிவியல் நிலையம் முதல்வர் விஜயகுமார் பிரசார இயக்கத்தின் நோக்கம், பயன்பாடுகள் குறித்து விளக்கினார்.
வேளாண் அறிவியல் நிலையம் பொறியியல் பிரிவு வல்லுனர் பாஸ்கர் வேளாண் இயந்திரமையமாக்கல் தேவைகள் குறித்தும், மணிலா விதைப்பு குறித்து விளக்கினார்.
வேளாண் வேதியியல் பிரிவு அலுவலர் மாசிலாமணி மண்வளம், மண்மாதிரி சேகரித்தல், மண்ணில் உள்ள சத்துக்கள் குறைபாடுகள், அவற்றை நிவர்த்தி செய்யும் முறை, மண்வள அட்டையின் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். நிகழ்ச்சியில், கரியமாணிக்கம், மொளப்பாக்கம், நெட்டப்பாக்கம், பண்டசோழநல்லுார், மடுகரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை களப்பணியாளர்கள் ரங்கநாதன், வெங்கடசாலம், லட்சுமிநாராயணன் ஆகியோர் செய்திருந்தனர்.ஆத்மா திட்ட மேலாளர் பக்தவச்சலம் நன்றி கூறினார்.