/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கார்னிவல் திருவிழாவில் கட்டுமரப்போட்டி
/
கார்னிவல் திருவிழாவில் கட்டுமரப்போட்டி
ADDED : ஜன 17, 2024 08:23 AM

காரைக்கால் : காரைக்கால் கார்னிவல் திருவிழாவில் நேற்று கட்டுமரப்போட்டி நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து கடந்த 14ம் தேதி கார்னிவல் திருவிழா துவக்கியது. இவ்விழாவில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தது.
நேற்று அரசலாற்றில் கட்டுமரம்போட்டிகள் நடந்தது.இதில் காரைக்கால்மேடு, கிளிஞ்சல்மேடு,காளிகுப்பம், அக்கம்பேட்டை, பட்டினச்சேரி, மண்டபத்தூர் உள்ளிட்ட 9அணிகள் கலந்துகொண்டனர்.
இப்போட்டியை கலெக்டர் குலோத்துங்கன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதில் ஒரு கட்டுமரத்தில் 3பேர் கலந்து கொண்டனர்.அரசலாற்று பாலம் அருகே போட்டி துவங்கி 800 மீட்டர் துாரம் சென்று திரும்பி, துவங்கிய இடத்திற்கு வரவேண்டும்.
இப்போட்டியில் காளிக்குப்பம் மீனவ கிராமம் முதல் பரிசையும்,மண்டபத்தூர் மீனவ கிராமம் இரண்டாம் பரிசையும், கிளிஞ்சல் மேடு மீனவ கிராமம் மூன்றாம் பரிசையும் தட்டி சென்றது. இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் கோவிந்தசாமி,எஸ்.பி.,சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

