ADDED : மே 23, 2025 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் ஜல்லி கொட்டிய நபர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
உருளையன்பேட்டை பெரியார் நகர் சாலையில், இடையூறாக ஜல்லி, செங்கல் வைத்துள்ளதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதையடுத்து, போலீசார் அந்த பகுதியை பார்வையிட்டனர். ஜல்லி கொட்டிய முதலியார்பேட்டை உடையார் தோட்டத்தை சேர்ந்த நடனமூர்த்தி, 53, என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.