/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விலங்கு நல ஆணைய பயிற்சி மாணவர்களுக்கு சான்றிதழ்
/
விலங்கு நல ஆணைய பயிற்சி மாணவர்களுக்கு சான்றிதழ்
ADDED : ஜூன் 04, 2025 01:01 AM

புதுச்சேரி,: புதுச்சேரி நகராட்சி மற்றும் விலங்குகள் நல ஆணையம் சார்பில், விலங்கு நலன் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ், தன்னார்வலர்களுக்கு விருதும் வழங்கப்பட்டது.
புதுச்சேரி நகராட்சி மற்றும் குறல் அற்றவர்களின் குறல், இணைந்து 'விலங்கு நலன் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் சிறந்த மனிதம் விருது வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர் கந்தசாமி, குறல் அற்றவர்களின் குறல், தலைவர் அசோக் ராஜ், ப்ளூ கிராஸ் அமைப்பை சேர்ந்த சமரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
பயிற்சி வகுப்பை முடித்த மாணவ, மாணவிகளுக்குசான்றிதழ் வழங்கபட்டது.
அதனை தொடர்ந்து, உயிர்நேயத்துடன் சேவை ஆற்றிய தன்னார்வலர்களுக்கு 'சிறந்த உயிர்நேயம் விருது வழங்கபட்டது. நிகழ்ச்சியை கங்காதரன் தொகுத்து வழங்கினார்.