/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் அமைச்சர்கள் மாலை அணிவிப்பு
/
திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் அமைச்சர்கள் மாலை அணிவிப்பு
திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் அமைச்சர்கள் மாலை அணிவிப்பு
திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் அமைச்சர்கள் மாலை அணிவிப்பு
ADDED : ஜன 17, 2024 12:30 AM

புதுச்சேரி : திருவள்ளுவர் தினத்தையொட்டி, அவரது சிலைக்கு முதல்வர் ரங்கசாமிமாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
புதிய பஸ் நிலையத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு, முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம்,அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய் சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் நேரு, பாஸ்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தி.மு.க., சார்பில் எதிர்கட்சி தலைவர் சிவா, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., அவை தலைவர் சிவக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கலை இலக்கிய பெருமன்றம் மாநில தலைவர் எல்லை சிவக்குமார் தலைமையில், ஆதிகேசவன், பொதுச் செயலாளர் பாலகங்காதரன், ராதாகிருஷ்ணன், பொருளாளர் துரை செல்வம், துணை தலைவர் முனிசாமி, செயலாளர் சக்தி குருநாதன், சூரிய நாராயணன் ஆகியோர் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அதன் தலைவர் ராமதாஸ் தலைமையில், சேர்மன் வெங்கட்ராமன், பொதுச்செயலாளர் ராஜன், மாநில செயலாளர் பரந்தாமன், இணை செயலாளர் பெருமாள், உதவி செயலாளர் ஆண்டாள்,ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

