/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிருமாம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனை பார்வையிட்ட கல்லுாரி மாணவர்கள்
/
கிருமாம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனை பார்வையிட்ட கல்லுாரி மாணவர்கள்
கிருமாம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனை பார்வையிட்ட கல்லுாரி மாணவர்கள்
கிருமாம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனை பார்வையிட்ட கல்லுாரி மாணவர்கள்
ADDED : ஜூன் 28, 2025 12:36 AM

பாகூர் : கிருமாம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனை, கல்லுாரி மாணவர்கள் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொண்டனர்.
பள்ளி, கல்லுாரி மாணவ மாணவிகளை, அரசு துறைகளின் முக்கிய அலுவலகங்களுக்கு அழைத்து சென்று, அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பாலாஜி வித்யா பீத் பல்கலைக் கழகத்திற்குட்பட்ட மருத்துவ கல்லுாரி, நர்சிங் கல்லுாரி, பிசியோதெரபி கல்லுாரியின் மாணவ - மாணவிகள் நேற்று கிருமாம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு களப் பயணம் சென்றனர். போலீசார் அவர்களை வரவேற்று உபசரித்தனர்.
தொடர்ந்து, போலீஸ் நிலையத்தில் நடைபெறும் அன்றாடப் பணிகளை மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். அப்போது, சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், 'சட்டம், ஒழுங்கு மற்றும் குற்ற வழக்குகள் எவ்வாறு விசாரிக்கப்படும்; புதிய குற்றவியல் சட்டங்கள், போலீசார் பயன்படுத்தும் ஆயுதங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள், அவசர உதவி எண்கள் குறித்து விளக்கினார். மாணவர்களின் சந்தேகங்களுக்கு போலீசார் விளக்கமளித்தனர்.