நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாய் தொல்லை
முதலியார்பேட்டை, ஜெயம் நகர், அண்ணாமலையார் தெருவில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.
குமாரி, முதலியார்பேட்டை.
காமராஜர் நகர் தொகுதி, ரெயின்போ நகர், 7 வது குறுக்கு தெருவில் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.
ராஜீ,ரெயின்போ நகர்.
தெரு விளக்கு எரியவில்லை
முதலியார்பேட்டை காந்திவீதியில் கடந்த ஓராண்டாக, தெருவிளக்கு எரியவில்லை. இதுசம்மந்தமாக புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை.
குமார்,முதலியார்பேட்டை.
கழிவுநீர் தேக்கம்
புதுச்சேரி, நேருவீதி மற்றும் கேண்டீன் வீதி சந்திப்பில், கழிவுநீர் பிரச்னை அதிகமாக உள்ளது. இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பாரதி, புதுச்சேரி.

