Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கட்டட தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கட்டட தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கட்டட தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கட்டட தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ADDED : பிப் 27, 2024 06:48 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: புதுச்சேரி மாநில கட்டட தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் உள்ள கட்டட மற்றும் இதர கட்டுமான நல வாரியம் முன்பு நடந்த போராட்டத்திற்கு சங்கத் தலைவர் தீர்த்தமலை தலைமை தாங்கினார்.

பொது செயலாளர் ஆறுமுகம்,பொருளாளர் பெரியான்,இணை செயலாளர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிலாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி முழக்கமிட்டனர்.

தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற்று கட்டட தொழிலாளர்களை காக்க வேண்டும், டில்லியில் உள்ளதை போன்று தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us