/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகிகள் பதவியேற்பு
/
கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகிகள் பதவியேற்பு
ADDED : ஜூன் 21, 2025 06:19 AM

புதுச்சேரி: கைவினை கலைஞர்களுக்கான புதுமை கூட்டுறவு சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.
புதுச்சேரி கைவினை கலைஞர்களுக்கான புதுமை கூட்டுறவு சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 13ம் தேதி மாவட்ட தொழில் மையத்தில் நடந்தது.
இத்தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள், இயக்குனர்கள் பதவியேற்பு விழா மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கோவிந்தராஜ் தலைமை நடந்தது.
மாவட்ட தொழில் மைய மேலாளர் திருமுருகன் வரவேற்றார். கைவினை கலைஞர்களுக்கான புதுமை கூட்டுறவு சங்கத்தின் புதிய தலைவராக சேகர், துணைத் தலைவராக புவனேஸ்வரி, செயலாளராக ரமேஷ் மற்றும் செல்வகுமார், சண்முகம், பாலமுருகன், முத்து, சுரேஷ்குமார் ஆகியோர் இயக்குனர்களாக பதவி ஏற்று கொண்டனர்.
புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கோவிந்தராஜ், பத்மஸ்ரீ விருது பெற்ற டெரகோட்டா கலைஞர் முனிசாமி ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். தொழில் மற்றும் வணிகத்துறை உதவி இயக்குநர் ராகவன், தொழில் மைய திட்ட மேலாளர்கள் முத்துகிருஷ்ணன், ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.