/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மருத்துவமனையில் காப்பர் கம்பி திருட்டு
/
மருத்துவமனையில் காப்பர் கம்பி திருட்டு
ADDED : மே 29, 2025 11:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: அரசு மருத்துவமனை வெளியில் இருந்த காப்பர் கம்பியை திருடிய மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
புதுச்சேரி கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை உள்ளது. மருத்துவமனை கட்டட உடலியல் துறையின் பின்புறம் உள்ள ஏ.சி., மிஷினில் பொருத்த காப்பர் கம்பி வைக்கப்பட்டிருந்தது.
நேற்று காலை செக்யூரிட்டி பார்க்கும் போது காப்பர் கம்பி காணாமல் போயிருந்தது. அவற்றின் மதிப்பு 13 ஆயிரம் ரூபாய் ஆகும். இதுகுறித்து, புகாரின் பேரில், டி.நகர் போலீசார் வழக்கு பதிந்து காப்பர் கம்பியை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.