தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முதியவருக்கு கொலை மிரட்டல்

முதியவருக்கு கொலை மிரட்டல்

முதியவருக்கு கொலை மிரட்டல்


ADDED : செப் 01, 2025 06:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2025 06:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : உறுவையாறு நத்தமேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் பரந்தாமன் 62, கூலித் தொழிலாளி. இவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் கடந்த 26ம் தேதி மதியம் வீட்டில் இருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த பூபாலன் 34, அவருடன் பாகூரைச் சேர்ந்த தீபா(எ)பானு 31, பூமாதேவி 60, உறுவையாறு தேனி ஜெயக்குமார் நகரைச் சேர்ந்த பாரதி 21, ஆகியோர் பரந்தாமனிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

அப்போது பூபாலன் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் பரந்தாமனின் கையில் கிழித்து விட்டு கொலை மிரட்டல் விடுத்து நான்கு பேரும் அங்கிருந்து சென்றனர்.

அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த பரந்தாமனை மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில் மங்கலம் போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us