/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கூலித் தொழிலாளிக்கு கொலை மிரட்டல்
/
கூலித் தொழிலாளிக்கு கொலை மிரட்டல்
ADDED : ஜன 17, 2024 12:52 AM
நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கத்தில் கூலித்தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செம்படப்பேட்டை புதுநகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 42; கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் நெட்டப்பாக்கம் சென்றார். அப்போது கரியமாணிக்கம் பான்லேட் அருகில் சென்றபோது, அவரை பின் தொடர்ந்து வந்த நெட்டப்பாக்கம் அம்மாப்பேட்டையை சேர்ந்த சக்திவேல், 41; போலீஸ் வீதியைச் சேர்ந்த கார்த்தி, 39; ஆகியோர் சென்ற பைக் ஆறுமுகம் பைக்கை உரசியுள்ளது. இதனை தட்டிக்கேட்ட ஆறுமுகத்தை இருவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

