பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் கின்னஸ் சாதனை
பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் கின்னஸ் சாதனை
ADDED : மார் 23, 2026 08:21 PM

புதுச்சேரி: புதுச்சேரி பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் நான்கு பேர், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துப் பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர்.
இப்பள்ளியின் மாணவர் ஆலன் டேரியஸ் ரியல், 65 விலங்குகளின் அறிவியல் பெயரைக் கண்டறிந்து அவ்விலங்குகளின் பெயரை வேகமாக 1 நிமிடத்திற்குள் கூறினார். மாணவர் தஸ்வின், 41 விலங்குகளின் ஒலியை வைத்து அதன் பெயரை மிக வேகமாக 1 நிமிடத்திற்குள் கண்டறிந்தார். மாணவி சமீரா, 55 கடல்வாழ் உயிரினங்களின் பெயரை அதி விரைவாக ஒரு நிமிடத்திற்குள் கூறினார். மாணவர் லோகித், 59 கார்ட்டூன் போகிமான்களின் பெயர்களை மிக வேகமாக ஒரு நிமிடத்திற்குள் கண்டறிந்தார்.
இதன் மூலமாக, மாணவர்கள் நான்கு பேரும், புதிய கின்னஸ் சாதனை படைத்தனர்.
சாதனை படைத்த மாணவர்களுக்கான பாராட்டு விழா பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வர் பாஸ்கல் ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராகப் புதுச்சேரி அரசின் கலை மற்றும் கலாச்சார துறையின் செயலர் முத்தம்மா, கலந்து கொண்டு கின்னஸ் சாதனை படைத்த மாணவர்களை பாராட்டினார்.
கவுரவ விருந்தினராக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கண்காணிப்பாளர் பிரேம்குமார், தலைமை சிவில் அறுவை சிகிச்சை நிபுணர், பெண்கள், குழந்தை மற்றும் பொது மருத்துவர் ஆர்த்தி திருமாறன் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
மாணவர்களின் இந்த பிரம்மாண்ட சாதனை பள்ளிக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்ததுடன் மற்ற மாணவ-மாணவியர்களுக்கும் உந்துதலையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
