தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உதவியாளர் பணிக்கு வயது தளர்வு கவர்னரிடம் தி.மு.க., கோரிக்கை

உதவியாளர் பணிக்கு வயது தளர்வு கவர்னரிடம் தி.மு.க., கோரிக்கை

உதவியாளர் பணிக்கு வயது தளர்வு கவர்னரிடம் தி.மு.க., கோரிக்கை


ADDED : அக் 08, 2024 03:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 08, 2024 03:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மூன்று ஆண்டு வயது தளர்வு அளிக்க வேண்டும் என, எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், கவர்னரிடம் கோரிக்கை வைத்தனர்.

எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில் தி.மு.க., அவை தலைவர் எஸ்.பி., சிவக்குமார், எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் ஆகியோர் கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து அளித்த மனு:

உதவியாளர் பணிகள் இந்த ஆண்டு முதல் முறையாக நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் வயது அதிகமானதால்விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகள் தாமதித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், அவர்களுக்கான பொதுவான வயது வரம்பை தளர்த்தி போட்டித் தேர்வில் பங்கேற்க வாய்ப்புஏற்படுத்த வேண்டும்.

நாட்டின் பல மாநிலங்களிலும் வயது தளர்வு கொடுத்து போட்டி தேர்வு நடந்துள்ளது.

புதுச்சேரியில் அரசு பதிவிதழ் பெறாத குரூப்-பி பணியிடங்கள் ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைக்கு முன் குரூப்-சி பணியிடங்களாக இருந்தன.அதனை முன்னிட்டு குரூப்-பி பணியிடங்களுக்கான நேரடி நியமனத்தில் எம்.பி.சி., மீனவர், முஸ்லீம், பி.டி., ஆகிய பிரிவினருக்கு புதுச்சேரி அரசு சமூக நலத்துறையின் 15.03.2023 நாளிட்ட அரசாணை மூலம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது.

எனவே, உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மூன்று ஆண்டுகால வயது தளர்வு அளித்து, புதுச்சேரி பட்டதாரிகள் பங்கேற்கும் வாய்ப்பை உருவாக்கித்தர வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us