/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு ஓவியப்போட்டி
/
போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு ஓவியப்போட்டி
ADDED : ஜன 10, 2024 01:59 AM

புதுச்சேரி : வில்லியனுார் அடுத்த தொண்டமாநத்தம் அன்சாரி துரைசாமி அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடந்தது.
சமூக நலத்துறை மற்றும் அன்சாரி துரைசாமி அரசு மேல்நிலைப்பள்ளி இணைந்து போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு ஓவியப்போட்டியை நடத்தின.
நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் சாமிநாதன் தலைமை தாங்கினார். நோடல் அதிகாரி மணிகண்டன் ஓவியப் போட்டி பற்றி விளக்கினார். புகை நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு என்ற தலைப்பில் 68 மாணவர்கள் ஓவியம் வரைந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், தியாகு, மகாதேவன், கலைவாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

