தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போதைப் பொருள் தடுப்பு முகாம்

 போதைப் பொருள் தடுப்பு முகாம்

 போதைப் பொருள் தடுப்பு முகாம்


ADDED : மார் 19, 2026 04:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 04:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி பிரெஞ்சு சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் நோணாங்குப்பம், உதவிக் கரங்கள் சங்க கருத்தரங்க கூடத்தில், தாகூர் கலை மற்றும் அறிவியல்கல்லுாரி மாணவர்களுக்கான போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தன்னம்பிக்கை பயிற்சி முகாம் நடந்தது.

நிகழ்ச்சிக்கு முனைவர் அருண் நாகலிங்கம் வரவேற்றார்.

ரோட்டரி சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் பரிமளம் முகாமை துவக்கி வைத்தார்.

புதுச்சேரி அரசின் சிறுவர் நலக்குழு முன்னாள் உறுப்பினர் எழுத்தாளர் அரிமதி இளம்பரிதி கலந்து கொண்டு போதைப் பொருள் தடுப்பு, கல்வி, அறிவு,ஒழுக்கம், உயர் எண்ணம், போட்டித் தேர்வு எழுதும் முறைகள், உயர் கல்வி மற்றும் சமூக ஊடகங்களை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தும் முறைகள்குறித்து பயிற்சியளித்தார்.

தொடர்ந்து, மாணவர்களிடையே நேர்மையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் சங்கத்தின் சார்பாக நேர்மை அங்காடி திறந்துவைக்கப்பட்டது.

உதவும் கரங்கள் சசிகுமார் நன்றி கூறினார். மாணவர்களின் கலந்துரையாடல் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us