தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தேர்தல் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் ஆலோசனை

 தேர்தல் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் ஆலோசனை

 தேர்தல் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் ஆலோசனை


ADDED : மார் 20, 2026 07:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 20, 2026 07:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சட்டசபை தேர்தலையொட்டி, விதி மீறல்களை கண்காணிக்க தொகுதிகள் வாரியாக நியமிக்கப்பட்டுள்ள பொது மற்றும் செலவினப் பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், ஒருங்கிணைப்பு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கலெக்டர் குலோத்துங்கன் பேசுகையில், 'புதுச்சேரி, மாகே,ஏனாம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை, அவற்றின்பதற்றமான ஓட்டுச்சாவடிகள் விபரங்கள், தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்கள், காவலர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சிகளின் விபரம், அமலில் உள்ள தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்களை கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுக்கள், அவைகளின் செயல்பாடுகள் மற்றும் அக்குழுக்கள் இதுவரை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தேர்தல் பார்வையாளர்களுக்கு விளக்கினார்.

கூட்டத்தில், சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி., கலைவாணன், புதுச்சேரி காவல் துறை சார்பில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள விபரங்கள் குறித்து விளக்கினார்.

கூட்டத்தில், மத்திய அரசின் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சரக்கு மற்றும் சேவை ஆணையர் அலுவலகம், கலால் துறை, விமானப்படை மற்றும் மாநில அரசின் வணிகவரித் துறை அதிகாரிகளுடன் செலவின கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் குறித்து தேர்தல் பார்வையாளர்கள் ஆலோசனை நடத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us