/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சைபர் கிரைம் போலீசில் 'நில் ரிப்போர்ட்'
/
சைபர் கிரைம் போலீசில் 'நில் ரிப்போர்ட்'
ADDED : ஜூன் 24, 2025 06:15 AM
புதுச்சேரி : பல மாதங்களுக்கு பிறகு சைபர் கிரைம் போலீசார் பூஜ்ஜியம் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரியில், படித்தவர்கள் பலர் ஆன்லைன் மூலம் மோசடி கும்பலிடம் லட்ச கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர்.
ஆன்லைன் மூலம் பண மோசடி செய்தது தொடர்பாக, புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் தினமும், 5 முதல் 10 வழக்குகள் பதிவு செய்து வந்தனர்.
இந்த மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் பல்வேறு வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பல மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம், சைபர் கிரைம் போலீசார், பூஜ்ஜியம் வழக்கு பதிவு (நில் ரிப்போர்ட்) செய்துள் ளனர். இது பெரும் ஆச்சரியமாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.