/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வேலை இல்லாத விரக்தி தொழிலாளி தற்கொலை
/
வேலை இல்லாத விரக்தி தொழிலாளி தற்கொலை
ADDED : ஜன 12, 2024 12:00 AM
புதுச்சேரி: வேலை இல்லாத விரக்தியில் தொழிலாளி ஆசிட்டை தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.உருளையன்பேட்டை, அருந்ததியர் நகரை சேர்ந்தவர் விஜயகுமார், 40; இவர் பாத்ரூம் அறைகளில் இருக்கும் டைல்ஸ் கறைகளை சுத்தம் செய்யும் வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாக வேலை இல்லாமல் விரக்தியில் இருந்தார்.நேற்று முன்தினம் பாத்ரூம் சுத்தம் செய்ய வைத்திருந்த ஆசிட்டை தண்ணீரில் கலந்து குடித்து, மயங்கி விழுந்தார்.வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து விஜயகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து, உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மற்றோரு சம்பவம்
லாஸ்பேட்டை, சாமிபிள்ளை தோட்டத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மனைவி கவுசல்யா, 36; கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை இருந்து வந்தது.நேற்று முன்தினம் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. மனமுடைந்த கவுசல்யா வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

