/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வர்த்தக சபையின் தலைவராக குணசேகரன் மீண்டும் தேர்வு
/
வர்த்தக சபையின் தலைவராக குணசேகரன் மீண்டும் தேர்வு
ADDED : மார் 25, 2025 04:05 AM

புதுச்சேரி: புதுச்சேரி வர்த்தக சபையின் தலைவராக குணசேகரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி வர்த்தக சபைக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி, கடந்த 2022ம் ஆண்டு நடந்த நிர்வாகக் குழு தேர்தலில் வர்த்தக சபை தலைவராக குணசேகரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அந்த நிர்வாகக் குழுவின் பதவிக்காலம் வரும் 31ம் தேதியுடன் முடிவடைவதால், புதிய நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது.
தேர்தலில் தற்போதிய தலைவர் குணசேகரன் தலைமையிலான 15 பேரும், சிவசங்கர் எம்.எல்.ஏ., தலைமையிலான15 பேரும் போட்டியிட்டனர்.
தேர்தலின் முடிவில், தற்போதிய தலைவர் குணசேகரன் தலைமையில் போட்டியிட்ட 14 பேரும், எதிர் அணியில் சிவசங்கர் எம்.எல்.ஏ., மட்டும் தேர்வாகினர்.
பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இணைந்து, புதிய தலைவராக குணசேகரனை மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர். துணைத் தலைவராக ரவி, பொதுச் செயலாளராக வி.எம்.எஸ். ரவி, இணைப் பொதுச்செயலாளராக நமச்சிவாயம், பொருளாளராக தண்டபாணி (எ) ராஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
நிர்வாக குழு உறுப்பினர்களாக ஜெய்கணேஷ், குகன், ஆனந்தன், சதாசிவம், தேவக்குமார், முகமது சிராஜ், குமார், ஞானசம்பந்தம், ராஜவேல், சிவசங்கர் எம்.எல்.ஏ.,ஆகியோர் தேர்ந்தெடுக்கபட்டனர்.
தேர்தல் அதிகாரிகளாக ஓய்வு பெற்ற பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் கிருஷ்ணராஜூ, வர்த்தக சபையின் மூத்த உறுப்பினர்கள் ஆறுமுகம், சுவாமிநாதன் ஆகியோர் பணியாற்றினர்.