தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காரைக்காலில் கைப்பந்து போட்டி

காரைக்காலில் கைப்பந்து போட்டி

காரைக்காலில் கைப்பந்து போட்டி


ADDED : ஜூன் 05, 2025 07:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2025 07:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்கால்; காரைக்காலில் நடந்த கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு சந்திரபிரியங்கா எம்.எல்.ஏ, பரிசு வழங்கினார்.

காரைக்கால் மாவட்டத்தில் பூவம் சிக்ஸ் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 46ம் ஆண்டு கைப்பந்து போட்டி, பூவம் காமராஜர் அரசு உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் நடந்தது.இரண்டு நாள் நடைபெற்ற இப்போட்டியில், பூவம், காரைக்கால், நாகப்பட்டினம், தரங்கம்பாடி உள்ளிட்ட 20 அணிகள் பங்கேற்றன.

இறுதி போட்டியில் பூவம் சிக்ஸ் ஸ்டார் அணி முதல் பரிசும், நாகை அக்கரைப்பேட்டை அணி 2ம் பரிசும், பூவம் அணி மூன்றாம் பரிசும், வலங்கைமான் அணி 4ம் பரிசை பெற்றன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு சந்திரபிரியங்கா எம்.எல்.ஏ., பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்கள் ராமலிங்கம், சண்முகசுந்தரம், விஜயகுமார், காளிதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us