/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஹயகிரிவர் பள்ளி 21ம் ஆண்டு விழா
/
ஹயகிரிவர் பள்ளி 21ம் ஆண்டு விழா
ADDED : மார் 25, 2025 04:08 AM

புதுச்சேரி: முள்ளோடையில் அமைந்துள்ள ஹயகிரிவர் பப்ளிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் டி.வி.ஆர்.,கல்வியியல் கல்லுாரியின் 21வது ஆண்டு விழா நடந்தது.
பள்ளி மற்றும் கல்லுாரி தாளாளர் ரங்கமணி தலைமை தாங்கி, விழாவை துவக்கி வைத்தார். மேலும், இந்நுாற்றாண்டின் பள்ளி மாணவர்களின் பங்களிப்பு மற்றும் மாணவர்களின் ஒழுக்க நெறிகள் குறித்து தொகுப்புரையாற்றினார்.
பவானி அம்மாள் கல்வி அறக்கட்டளை இயக்குனர் சித்ரா ராஜேஸ்வரி, டி.வி.ஆர்., கல்வியியல் கல்லுாரி முதல்வர் சுகந்தி ஒனோரின் வாழ்த்துரை வழங்கினர்.விழாவில் பரதம், மேற்கத்திய நடனம், தெனாலிராமன் நாடகம், கராத்தே, யோகா, நாட்டுப்புற நடனம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. 2024-2025ம் கல்வி ஆண்டில் முதல் மற்றும் இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. பள்ளி முதல்வர் அலெக்சாண்டர் சேவிர் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.