/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நிரந்தர பணி வழங்க வாரிசுதாரர் சங்கம் கோரிக்கை
/
நிரந்தர பணி வழங்க வாரிசுதாரர் சங்கம் கோரிக்கை
ADDED : ஜூன் 28, 2025 06:55 AM
புதுச்சேரி : பொதுப்பணித் துறையில் கருணை அடிப்படையில் வேலை பெற்றோர் விவகாரத்தில் கவர்னர் தலையிட வேண்டும் என, பொதுப்பணித் துறை வாரிசுதாரர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சங்க செயலாளர் கோபிகண்ணன் அறிக்கை:
பொதுப்பணித் துறையில் கடந்த 2000 முதல் ஆண்டு தோறும் ஏற்படும் காலி பணியிடங்களில் 5 சதவீதம் கருணை அடிப்படையில் வாரிசுதாரர்களை கொண்டு நிரப்பாததால் 190 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே, தகுதியான வாரிசுதாரர்கள் என்று பொதுப்பணி செயலாளரால் சான்றளிக்கப்பட்டும் அவர்களுக்கு நிரந்தர வேலை வழங்கப்படவில்லை. இதனால் வாரிசுதாரர்கள் வேலை பெற்றும் எதிர்காலம் இல்லாமல் உள்ளனர்.
நீதிமன்றம் வரை சென்று உத்தரவு பெற்றாலும் நிரந்தர பணி வழங்கப்பட வில்லை. ஆனால் ஒருவருக்கு மட்டும் பணி வழங்கியுள்ளனர். இதுவரை 130 கோரிக்கை கடிதம் கொடுத்தும் பலன் இல்லை.
இந்த விவகாரத்தில் கவர்னர், முதல்வர், பொதுப்பணித் துறை அமைச்சர் தலையிட்டு நீதிமன்ற உத்தரவினை நிலை நாட்ட வேண்டும். கருணை அடிப்படையில் வேலை பெற்ற வாரிசுதாரர்களுக்கு நிரந்தர பணி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.