/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'என்னில் உன்னை காணும் ஞானம் வேண்டும் கண்ணா' ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
/
'என்னில் உன்னை காணும் ஞானம் வேண்டும் கண்ணா' ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
'என்னில் உன்னை காணும் ஞானம் வேண்டும் கண்ணா' ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
'என்னில் உன்னை காணும் ஞானம் வேண்டும் கண்ணா' ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
ADDED : ஜன 10, 2024 01:31 AM
புதுச்சேரி : முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகர், லட்சுமி ஹயக்ரீவர் கோவி லில், மார்கழி மாதத்தையொட்டி, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம், திருப்பாவையின் 24ம் பாசுரம் குறித்து நேற்று உபன்யாசம் செய்ததாவது;
கண்ணன் மேல் வைத்த பேரன்பின் வெளிப்பாடாக ஆண்டாள், தன் தோழியர் சூழ கண்ணனைப் போற்றிப் பல்லாண்டு பாடியதாக, இந்த பாசுரம் உள்ளது. இதை திருப்பாவையின் திருப்பல்லாண்டு என்பர்.
வாமனன் ஓங்கி உயர்ந்து வளர்ந்த போது, எம்பெருமானின் ஒரு திருவடி பூமியில் இருக்க, சத்யலோகம் வரை நீண்ட மற்றொரு திருவடிக்கு, பிரம்மன் பாத பூஜை செய்து, மங்களாசாசனம் பண்ணினான்.
ஆனால், பூமியை அளந்த திருவடிக்கு யாரும் பாத பூஜை பண்ணவில்லையே என்ற ஏக்கத்தில், ஆண்டாள் இவ்வுலகம் அளந்த எம்பெருமானின் திருவடிக்கு மங்களாசாசனம் செய்து, இவ்வுலகம் அளந்த அடியைப் போற்றினாள்.
ராம பட்டாபிஷேகத்தில், இந்திரனைத் தவிர மற்ற தேவர்கள் வந்து எம்பிரானை தொழுதனர்.
அந்த குறையை நீக்க கிருஷ்ணாவதாரத்தில் இந்திரனின் கர்வத்தை அழித்து, தோற்ற இந்திரனே வந்து கோவிந்த பட்டாபிஷேகம் செய்ய வைத்த கண்ணனின் திறனுக்கு ஒரு மங்களாசாசனம் செய்ய வேண்டும் என்று, குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி என்று அருளினாள்.
தன் தந்தையாரான பெரியாழ்வார், எம்பிரா னின் திவ்ய ஆயுதங்களுக்கும் பல்லாண்டு பாடி வாழ்த்தியது போல், தானும் கண்ணனின் கை வேலையும் போற்றுகின்றாள்.
பார்ப்பதெல்லாம் கண்ணனே என்று உணராமல் தடுக்கும் மதமாச்சர்யம் அழித்து, என்னில் உன்னையும், உன்னில் என்னையும் காணும் ஞானம் அளித்தருள வேண்டும்.
உன் அடி போற்றி வந்தோம், உன் திறல் போற்றி வந்தோம், உன் புகழ் போற்றி வந்தோம், உன் கழல் போற்றி வந்தோம், உன் குணம் போற்றி வந்தோம், உன் வேல் போற்றி இன்று யாம் வந்தோம் இரங்கு! எங்களிடம் மனம் இரங்கலாகாதா?' என்று கோபியர் இறைஞ்சுவதாக ஆண்டாள் இந்தப் பாசுரத்தில் விண்ணப்பிக்கின்றாள்.

