/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரியாங்குப்பத்தில் இந்திய கம்யூ., கிளை மாநாடு
/
அரியாங்குப்பத்தில் இந்திய கம்யூ., கிளை மாநாடு
ADDED : ஜூன் 24, 2025 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : இந்திய கம்யூ., கிளை மாநாடு அரியாங்குப்பத்தில் நடந்தது.
அரியாங்குப்பத்தில் நடந்த மாநாட்டில், பாபு ஜெகதீஷ் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் சுகதேவ் வரவேற்றார். மாநாட்டு கொடியை, கீதாநாதன் ஏற்றி வைத்தார். கிளை செயலாளர் இந்து, மாநாட்டு அறிக்கையை சமர்ப்பித்தார். நிர்வாகக்குழு உறுப்பினர் அந்தோணி வாழ்த்தி பேசினார். செயலாளராக இந்து, துணை செயலாளராக ஜெகதீஷ், பொருளாளராக மலர்விழி ஆகிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும், டாக்டர்கள் தங்கி சிகிச்சை அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.