/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்
/
கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்
கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்
கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 13, 2025 03:25 AM

புதுச்சேரி: புதுச்சேரி இந்திய கம்யூ., சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
சட்டசபை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., நாரா கலைநாதன், மாநிலத் துணைச்செயலாளர் சேதுசெல்வம், தேசிய குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, மாநில பொருளாளர் சுப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், இலவச கல்வி திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணத்தை வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும். கல்வித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களின் முத்தரப்பு கூட்டத்தை அரசு உடனே நடத்திட வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.
தொடர்ந்து, கோரிக்கையை வலியுறுத்தி முதல்வர் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை செயலர் ஆகியோரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.