/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஒருங்கிணைந்த சாலை விபத்து தரவுதளம் பயிற்சி பட்டறை
/
ஒருங்கிணைந்த சாலை விபத்து தரவுதளம் பயிற்சி பட்டறை
ADDED : மார் 21, 2025 05:22 AM

புதுச்சேரி : புதுச்சேரி போலீசாருக்கான ஒருங்கிணைந்த சாலை விபத்து தரவுதளம் மற்றும் மின்னணு விரிவான விபத்து அறிக்கை சம்பந்தமாக ஒருநாள் பயிற்சி பட்டறை நேற்று நடந்தது.
தனியார் ஓட்டலில் நடந்த பயிற்சிக்கு, சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி தலைமை தாங்கினார். போக்குவரத்து கிழக்கு எஸ்.பி., செல்வம் முன்னிலை வகித்தார்.
டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் கலந்து கொண்டு பேசுகையில், 'கடந்த 2021ம் ஆண்டு முதல் ஒருங்கிணைந்த சாலை விபத்து தரவுத்தளம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த செயலி மூலம் இதுவரையில் 15 லட்சம் விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், மின்னணு விரிவான விபத்து அறிக்கை செயலி என்பது விபத்து தகவல்களை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உடனே வழங்கி, பாதிக்கப்பட்டவர்கள் நஷ்ட ஈடு மற்றும் சிகிச்சை பெற உருவாக்கப்பட்டது என்றார்.
சென்னை என்.ஐ.சி., இயக்குனர்கள் தனசேகர், மணிவாசகன், டில்லி என்.எச்.ஏ., இயக்குனர் பங்கஜ் அரோரா, பிரியங்கா குப்தா, மின்னணு விரிவான விபத்து அறிக்கை அதிகாரிகள் ஏபெல் தன்சிங், சதீஷ்குமார், மணிகண்டன், டில்லி என்.ஐ.சி.எஸ்.ஐ., திட்ட மேலாளர் பவன்குப்தா, நிதி ஆலோசகர் ஜிதேந்திரகுமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
இதில், புதுச்சேரி போலீஸ் எஸ்.பி., க்கள், இன்ஸ்பெக்டர்கள், நிலைய பொறுப்பு அதிகாரிகள், போக்குவரத்துத் துறை, நெடுஞ்சாலை துறை, கல்வித்துறைமற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.