தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ லீவுக்கு 'பீஸ்' கேட்ட ஐ.ஆர்.பி.என்., உதவி கமாண்டன்ட் 'சஸ்பெண்ட்'

லீவுக்கு 'பீஸ்' கேட்ட ஐ.ஆர்.பி.என்., உதவி கமாண்டன்ட் 'சஸ்பெண்ட்'

லீவுக்கு 'பீஸ்' கேட்ட ஐ.ஆர்.பி.என்., உதவி கமாண்டன்ட் 'சஸ்பெண்ட்'


ADDED : அக் 17, 2024 04:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 17, 2024 04:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: 'லீவுக்கு பீஸ்' கேட்ட ஐ.ஆர்.பி.என்., உதவி கமாண்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ஐ.ஆர்.பி.என்., உதவி சப்இன்ஸ்பெக்டர் சந்திரன். கடந்த மே மாதம் தனது உதவி கமாண்டன்ட் கோபிக்கு போன் செய்து, தனக்கு மருத்துவ விடுமுறை (லீவு) வேண்டும் என கேட்டார். அதற்கு, 'லீவு வேண்டுமானால் எனக்கு ஒரு பீஸ் (பெண்) ஏற்பாடு செய்து கொடு' என கேட்கும் உரையாடல் ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.

இந்த விவகாரம் தொடர்பாக புகார் ஏதும் அளிக்க கூடாது என, தனது கணவரை மிரட்டுவதாக சந்திரன் மனைவி ஆர்த்தீஸ்வரி, ஐ.ஆர்.பி.என். தலைமை கமாண்டரிடம் புகார் அளித்தார். டி.ஜி.பி., சந்தித்து முறையிட அனுமதி கேட்ட ஆர்த்தீஸ்வரிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால் கடந்த ஆக., 6ம் தேதி டி.ஜி.பி., அலுவலகம் முன், தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டார்.

உதவி காமாண்டன்ட் மீதான புகார் தலைமை கமாண்டன்ட் சுவாதிசிங் விசாரணை நடத்தி வந்தார்.

கடந்த மாதம் கோபி காரைக்காலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

விசாரணை முடிவு பெற்ற நிலையில், உதவி காமாண்டன்ட் கோபியை, ஐ.ஆர்.பி.என்., தலைமை கமாண்டன்ட சுவாதிசிங் நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us