ADDED : பிப் 29, 2024 11:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: மணவெளி தொகுதியில், நுாறு நாட்கள் வேலை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.
தவளக்குப்பம் எம்.எம்.ஏ., அலுவலகத்தில், நேற்று 70 பயனாளிகளுக்கு நுாறு நாள் வேலை திட்ட பணிக்கான அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம் பயனாளிகளிடம் அட்டைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், இளநிலை பொறியாளர் சிவஞானம், பணி ஆய்வாளர் நற்குணம், தலைவர் சுகுமாறன் கிருஷ்ணமூர்த்தி, கூட்டுறவு சங்க இயக்குனர் சக்திவேல், மாவட்ட துணைத் தலைவர் மணிகண்டன் பன்னீர், உட்பட பா.ஜ., பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

