/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
ADDED : மே 27, 2025 07:21 AM

திருபுவனை; திருபுவனை தொகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசின் திட்டங்களுக்கான அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது.
மதகடிப்பட்டு எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளின் பேரவை ஒருங்கிணைப்பாளர் சிறப்பு ஆசிரியர் சுரேஷ் தலைமை தாங்கினார். புதுச்சேரி அடோர் சொசைட்டி நிறுவனர் வாஞ்சிலிங்கம்முருகன் நோக்கவுரையாற்றினார். திருநாவுக்கரசு வரவேற்றார்.எம்.எல்.ஏ., அங்காளன் பயனாளிகளுக்கு மத்திய அரசின் திட்டங்களுக்கான அடையாள அட்டை வழங்கினார்.
இதில் மத்திய அரசின் திட்டங்களான ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடுத் திட்டம், பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா விபத்து காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட திட்டத்திற்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது.
கைவினை கலைஞர்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு கழத்தின் உறுப்பினர் அட்டை, ரயிலில் பயணம் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண சலுகை அடையாள அட்டை, மனவளர்ச்சி மாற்றுத்திறனாளிகளுக்கு நிர்மயா மருத்துவ காப்பீடு அட்டை உள்பட பல்வேறு திட்டங்களுக்கு 150 பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
வெங்கடேசன் நன்றி கூறினார்.