/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜே.சி.எம். மக்கள் மன்ற அன்னதான திட்டம் முதலியார்பேட்டையில் இன்று விரிவாக்கம் அமைச்சர் ஜான்குமார்தகவல்

ADDED : செப் 16, 2025 07:17 AM
புதுச்சேரி : ஜே.சி.எம்., அன்னதான திட்டம் முதலியார்பேட்டையில் இன்று விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
தமிழகத்தின் லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரியில் அரசியலில் கால்தடம் பதித்துவிட்டார். அவர் காம்ராஜ் தொகுதியில் நிற்கின்றார்.
அத்துடன் அவர் ஜே.சி.எம்., மக்கள் மன்றம் சார்பில், பொதுமக்கள் பசியாறும் வகையில் அன்னதான திட்டத்தை 15 தொகுதிகளில் துவக்கியுள்ளனர். முதல் கட்டமாக காமராஜர் தொகுதியிலும், இரண்டாம் கட்டமாக பாகூர் தொகுதியிலும் துவங்கப்பட்டது.
இது குறித்து அமைச்சர் ஜான்குமார் கூறியதாவது: மக்கள் பணியில் ஈடுபட்டுள்ள ஜே.சி.எம்., மக்கள் மன்றம் சார்பில் இந்த அன்னதான திட்டம் மூன்றாம் கட்டமாக இன்று 16ம் தேதி முதலியார்பேட்டை தொகுதி விரிவாக்கம் செய்யப்பட்டு, நைனார்மண்டபம் கடலுார் ரோடு துரைக்கண்ணு அமுர்தம்மாள் திருமண நிலையத்தில் துவக்கப்படுகிறது.
இங்கு திங்கள் முதல் சனிக்கிழமை வரை வாரத்திற்கு ஆறு நாட்கள் தினசரி உணவு வழங்கப்படும். மதியம் 12 மணி முதல் 2 மணி வரை இங்கு உணவு கிடைக்கும்.
வாரத்திற்கு 3 நாட்கள் அசைவம், 3 நாள் சைவம் என்ற அடிப்டையில் உணவு வழங்கப்படும். அடுத்து இருவாரத்தில் உழவர்கரை தொகுதியில் ரீனா மகாலில் இத்திட்டம் துவங்கப்படும். படிப்படியாக நெல்லித்தோப்பு, காலாப்பட்டு, மங்கலம், திருபுவனை, நெட்டப்பாக்கம் என 15 தொகுதிகளிலும் தினசரி உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என அன்று பாரதி முழங்கியதை தங்களின் உறுதி மொழியாக எடுத்து, ஜே.சி.எம்., மக்கள் மன்றம் இந்த அன்னதான திட்டத்தை ஆரம்பித்து படிப்படியாக விரிவாக்கம் செய்து வருகிறது.
இவ்வாறு கூறினார்.