/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கராத்தே உலக சாதனை எம்.எல்.ஏ., பரிசு வழங்கல்
/
கராத்தே உலக சாதனை எம்.எல்.ஏ., பரிசு வழங்கல்
ADDED : ஜூன் 05, 2025 07:31 AM

காரைக்கால்; காரைக்காலில் கராத்தே உலக சாதனை வீரர்களுக்கு நாஜிம் எம்.எல்.ஏ., பரிசுகள் வழங்கினார்.
காரைக்காலில் இன்டர்நேஷனல் வி.ஆர்.எஸ்., மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி மற்றும் ஜப்பனிஸ் கோஜி ரியோ ஸ்போர்ட்ஸ் கராத்தே அசோசியேஷன் சார்பில், ஜாக்கி புக் ஆப் ஓல்ட் ரெக்கார்ட் கராத்தே டபுள் நஞ்சாக் ரொட்டேஷன் என, மொத்தம் 125 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு 60 நிமிடத்தில் 7,50,000 கராத்தே டபுள் நஞ்சாக் ரொட்டேஷன் செய்து உலக சாதனை நிகழ்ச்சி கடந்த 30ம் தேதி நடந்தது.
சிறப்பு விருந்தினராக நாஜிம் எம்.எல்.ஏ., மற்றும் தி.மு.க. பிரமுகர் பிரபு பிரித்விராஜ் ஆகியோர் மாணவர்களை ஊக்கப் படுத்தி சான்றிதழ், பதக்கங்கள் வழங்கி பாராட்டினர்.
முன்னதாக அனைவரையும் கிராண்ட் மாஸ்டர் குமார் வரவேற்றார். கிராண்ட் மாஸ்டர்கள் செல்ல பாண்டியன், சென்சாய் கிருஷ்ணன், மாஸ்டர்கள் பூவேந்திரன் சரஸ்வதி, அனுப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.