sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கே.சி.எம்., மருத்துவமனை புதுச்சேரி கவர்னர் திறந்துவைப்பு

/

கே.சி.எம்., மருத்துவமனை புதுச்சேரி கவர்னர் திறந்துவைப்பு

கே.சி.எம்., மருத்துவமனை புதுச்சேரி கவர்னர் திறந்துவைப்பு

கே.சி.எம்., மருத்துவமனை புதுச்சேரி கவர்னர் திறந்துவைப்பு


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானூர் : புதுச்சேரி-திண்டிவனம் மெயின் ரோடு, திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள கே.சி.எம்., மருத்துவமனை திறப்பு விழா நேற்று நடந்தது.

புதுச்சேரி கவர்னர் தமிழிசை, மருத்துவமனையை திறந்து வைத்து, சிகிச்சை மையத்தை பார்வையிட்டார். விழாவில் உறவினர்கள், தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், வணிக நிறுவன நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த மருத்துவமனையின் சிறப்பு அம்சங்கள் குறித்து டாக்டர் மணிகண்டன் கூறுகையில், 'மருத்துவமனையில் எலும்பு மற்றும் சர்க்கரை நோய் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயாளிகளுக்காக 24 மணி நேர எலும்பு முறிவு சிகிச்சை, புறநோயாளிகள் நல சிகிச்சை, அறுவை சிகிச்சை அரங்கம், ரத்தப் பரிசோதனை நிலையம், எக்ஸ்ரே, ஆர்த்ரோஸ்கோபி, மூட்டு மற்றும் அறுவை சிகிச்சை கூடங்கள் உள்ளன.

தண்டுவட அறுவை சிகிச்சை, எலும்பு நகர்வு எதிர் சிகிச்சை, எலும்பு புற்றுநோய் சிகிச்சைகள், நீரிழிவு தடுப்பு, உணவு முறை ஆலேசனை வழங்கப்படுகிறது.

எடை இழப்பு, மனஅழுத்த மேலாண்மை, ரத்த சர்க்கரை குறைவு, இன்சுலின் மேலாண்மை, நீரிழிவு இருதய நோய், கர்ப்பிணிகளுக்கான சர்க்கரை நோய் சிகிச்சை, குழந்தைகளின் நீரிழிவு நோய்க்கான சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது' என்றார்.

விழாவிற்கு வந்தவர்களை, மணிகண்டன் டிம்பர், பிளைவுட்ஸ் மற்றும் கே.சி.எம்., கணபதி சேஷ மகால் உரிமையாளர் குமாரசாமி, சந்திரா குமாரசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் சலவாதி ஜெயகிருஷ்ணன், கம்சலா ஜெயகிருஷ்ணன், டாக்டர்கள் மணிகண்டன், சரண்யா ஆகியோர் வரவேற்று, நன்றி தெரிவித்தனர்.




    • Dinamalar Events


    Dinamalar