/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
/
தேசிய போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : பிப் 02, 2024 03:42 AM

புதுச்சேரி: தேசிய சாம்போ போட்டியில் வென்ற மாணவர்களை வைத்திலிங்கம் எம்.பி., பாராட்டினார்.
தேசிய அளவிலான சாம்போ போட்டி மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத்தில் உள்ள டிவிஷ்னல் ஸ்போர்ட்ஸ் உள் விளையாட்டு அரங்கில் கடந்த 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடந்தது.
இப்போட்டியில் 28 மாநிலங்களில் இருந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி மாநில சாம்போ அசோசியேன் சார்பில், பொது செயலாளர் மதிஒளி தலைமையில் 15 மாணவர்கள் கலந்துகொண்டு 3 தங்கம், 2 வெள்ளி மற்றும் 6 வெண்கல பதக்கங்களை வென்றனர்.
அவர்களை காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., புதுச்சேரி காங்., செயற்குழு உறுப்பினர் விஜயலட்சுமி ஜெயமூர்த்தி ஆகியோர் பாராட்டினர்.
மேலும் மாணவர்களை திருக்கனுார் சுப்ரமணிய பாரதி ஆங்கிலப் பள்ளி தாளாளர் சம்பத், மதகடிப்பட்டு பாரத தேவி ஆங்கிலப் பள்ளி தாளாளர் இளமதியழகன், வியாபாரிகள் சங்க தலைவர் திருவேங்கடம், கராத்தே சங்க சங்க செயலாளர் இளங்கோவன், கோஜ்ரியோ கராத்தே சங்க செயலாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் பாராட்டினர்.
நிகழ்ச்சியில், சங்க உறுப்பினர்கள் சங்கர், ஜனார்த்தனன், கோதண்டராமன், சரவணன், ரவிசங்கர், உதயன், நடுவர்களாக பங்குபெற்ற கோபாலகிருஷ்ணன், லலிதா, விக்னேஷ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

