ADDED : பிப் 06, 2024 04:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : வயிற்று வலியால் கூலித்தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கலிதீர்த்தாள்குப்பம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் முத்துலிங்கம், 66; கூலித்தொழிலாளி. இவருக்கு கடந்த இரண்டு வருடங்களாக வயிற்று வலிக்கு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அதிக வயிற்று வலி ஏற்பட்டதால் நேற்று காலை 8 மணியளவில் அவரது கூரைவீட்டில் வேட்டியால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.