/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம்
/
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம்
ADDED : ஜன 26, 2024 05:26 AM

புதுச்சேரி : தி.மு.க., மாணவர் அணி மற்றும் நெல்லித்தோப்பு, காமராஜர் நகர் தொகுதி சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சாரம் அவ்வை திடலில் நடந்தது.
மாநில மாணவர் அணி அமைப்பாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். மாணவரணி துணை அமைப்பாளர் ஸ்டீபன்ராஜ் வரவேற்றார். முன்னாள் அவைத் தலைவர் பலராமன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கார்த்திக்கேயன் முன்னிலை வகித்தனர்.
எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ., சிறப்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்று, தியாகிகளின் குடும்பத்தினருக்கு நினைவு பரிசுகள் வழங்கினார்.
கூட்டத்தில் தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள்., அனிபால் கென்னடி, சம்பத், முன்னாள் அமைச்சர் சிவக்குமார், பேச்சாளர் ராஜசேகர், நெல்லித்தோப்பு தொகுதி செயலாளர் நடராஜன், காமராஜர் நகர் தொகுதி செயலாளர் சிவக்குமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் வேலவன், கோகுல், மாநில துணை அமைப்பாளர் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

