/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நுாலக கட்டடம் மேம்படுத்தும் பணி
/
நுாலக கட்டடம் மேம்படுத்தும் பணி
ADDED : அக் 01, 2025 11:26 PM

திருபுவனை: கலிதீர்த்தாள்குப்பத்தில் சேதம் அடைந்தஅரசு கிளை நுாலக கட்டடத்தைமேம்படுத்தும் பணி மற்றும் சுற்று மதில் சுவர் அமைக்கும் பணியை அங்காளன் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
திருபுவனை தொகுதி, கலிதீர்த்தாள்குப்பம் கிராமத்தில் கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் அரசு கிளை நுாலக கட்டடத்தின் மேல் தளம் மற்றும் சுற்று சுவர்கள் சேதமடைந்து மழைக் காலத்தில் மழைநீர் கசியும் நிலை இருந்து வந்தது.
இதையடுத்து, புதுச்சேரி அரசு பொதுப்பணி துறையின் சார்பில், நுாலக கட்டடத்தை மேம்படுத்தும் பணி மற்றும் சுற்று சுவர் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
அங்காளன் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் வீரசெல்வம், கட்டடங்கள் மற்றும் சாலைகள் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் வைத்தியநாதன், உதவி பொறியாளர் சீனுவாசராம், இளநிலை பொறியாளர்கள் தமிழரசன், மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒப்பந்ததாரர் பச்சையப்பன், கிராம முக்கியஸ்தர்கள், திருபுவனை தொகுதி ஜே.சி.எம்., மக்கள் மன்ற நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

