ADDED : ஜன 17, 2024 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் அடுத்த பண்டசோழநல்லுார் முத்தாலம்மன் கோவில் வளாகத்தில், மாட்டுப்பொங்கலை முன்னிட்டுமஞ்சு விரட்டு நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.
நிகழ்ச்சியில்பண்டசோழநல்லுார், வடுக்குப்பம், கல்மண்டபம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதியில் இருந்து நுாற்றுாக்கும் மேற்பட்ட பசு மாடுகள், காளை மாடுகள், வண்ணம் பூசி, பலுான் கட்டி, தோரனையுடன் கோவில் வளாகத்தில் அழைத்து வந்தனர்.
பின் சாமிக்கு படைக்கப்பட்டு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் காளைகள், துள்ளி குதித்தவாறு ஓடியது. பின் மாட்டு வண்டியில் குட்டீஸ்கர் அமர்ந்து பொங்கலோ பொங்கல் என கோஷமிட்டமாறு மாட்டுப்பொங்கலை கொண்டாடினர்.
ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.

