/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு மருத்துவமனையில் மருத்துவ கருத்தரங்கு
/
அரசு மருத்துவமனையில் மருத்துவ கருத்தரங்கு
ADDED : பிப் 24, 2024 06:39 AM

புதுச்சேரி : புதுச்சேரி அரசு இந்திரா காந்தி மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு நிறுவனத்தில், வலிகளுக்கான நவீன சிகிச்சை முறைகள் தலைப்பில் மருத்துவ கருத்தரங்கு நடந்தது.
கருத்தரங்கை மருத்துவ கண்காணிப்பாளர் செல்வேள் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். சென்னை காவேரி மருத்துவமனை மயக்கவியல் துறை நிபுணர் மதன்குமார், பல்வேறு வலிகளுக்கான சிறப்பு நவீன சிகிச்சை முறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஷமிமுனிஸா பேகம், மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன், குறை தீர்ப்பு அதிகாரி ரவி, மருத்துவ வல்லுநர்கள், மருத்துவ அதிகாரிகள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர். சிறப்புரையாற்றிய டாக்டர் மதன்குமாருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.