/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கஞ்சா விற்பனை செய்த மருத்துவ மாணவர் கைது
/
கஞ்சா விற்பனை செய்த மருத்துவ மாணவர் கைது
ADDED : ஜன 27, 2024 06:30 AM
பாகூர் : கிருமாம்பாக்கம் தனியார் கல்லுாரி அருகே கஞ்சா விற்பனை செய்த மருத்துவக்கல்லுாரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
கிருமாம்பாக்கம் தனியார் கல்லுாரி அருகே மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
அதன்பேரில், கிருமாம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சந்தேகம்படும் படி நின்றிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அவர், பாலித்தீன் பையில் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது.
விசாரணையில், அவர், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சித்குமார், 22; என்பதும், தனியார் மருத்துவக் கல்லுாரியில் முட நீக்கியல் துறையில் நான்காம் ஆண்டு படித்து வருவதும் தெரிந்தது.
இதையடுத்து, சஞ்சித்குமாரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த ஒரு கிலோ 180 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
சஞ்சித்குமார் அடுத்த வாரம் இறுதி செமஸ்டர் தேர்வு எழுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

