/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விமான விபத்தில் இறந்தவர்களுக்கு அமைச்சர் இரங்கல்
/
விமான விபத்தில் இறந்தவர்களுக்கு அமைச்சர் இரங்கல்
ADDED : ஜூன் 14, 2025 12:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: குஜராத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அமைச்சர் சாய் சரவணன் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
குஜராத் மாநிலம், ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெடித்து சிதறியது.
விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
தன் வாழ்க்கையின் அடுத்த நிலைக்குச் செல்வதற்காக இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்ற இளைஞர்களும், குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர் என்பது வருந்தத்தக்கது.
உயிரிழந்த அனைத்து ஆன்மாக்களும் சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

