/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புது பஸ் நிலைய மேம்பாலத்துக்கு எஸ்கலேட்டர் வசதி அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
/
புது பஸ் நிலைய மேம்பாலத்துக்கு எஸ்கலேட்டர் வசதி அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
புது பஸ் நிலைய மேம்பாலத்துக்கு எஸ்கலேட்டர் வசதி அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
புது பஸ் நிலைய மேம்பாலத்துக்கு எஸ்கலேட்டர் வசதி அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
ADDED : மார் 21, 2025 05:27 AM
புதுச்சேரி, : சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம்;
ராமலிங்கம் (பா.ஜ.,): புது பஸ் நிலைய நடை மேம்பாலத்துக்கு லிப்ட், எஸ்கலேட்டர் வசதி செய்தால் மட்டுமே மக்கள் அதை பயன்படுத்துவார்கள். ராஜிவ்காந்தி குழந்தைகள் மருத்துவமனை 100 அடி சாலையின் குறுக்கே லிப்ட், எஸ்கலேட்டர் வசதியுடன் கூடிய நடை மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை கட்டினால் நோயாளிகள் பயன்பெறுவர். இதை அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அமைச்சர் லட்சுமிநாராயணன்: புது பஸ் நிலைய நடை மேம்பாலத்தை மக்கள் பயன்படுத்தும் வகையில் இந்த நிதியாண்டில் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக ராஜிவ் சதுக்கம் முதல், இந்திரா சதுக்கம் வரை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளதால், குழந்தைகள் மருத்துவமனை அருகே சுரங்கப்பாதை அமைக்க ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்படும்.
சம்பத் (தி.மு.க): புது பஸ் நிலைய மேம்பாலத்தை மறு கட்டமைப்பு செய்ய வேண்டும். குறிப்பாக கண்ணாடியுடன் கூடிய பாலமாக அமைத்தால் மக்கள் பயன்படுத்துவார்கள்.
நேரு (சுயேச்சை): எதற்கும் பயன்படாத அந்த பாலத்தை இடித்துவிடுவது நல்லது. இது தொடர்பாக பல ஆண்டாக கோரிக்கை வைத்து வருகிறேன். அரசு ஏன் மவுனமாக உள்ளது. பாலத்தில் சமூக விரோத செயல்கள் தான் நடக்கிறது.
ஆறுமுகம் (என்.ஆர்.காங்.,): ஜிப்மர் முன்பும் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கடக்கின்றனர். இங்கும் சுரங்கப்பாதை, பாலம் அமைக்க வேண்டும்.
அமைச்சர் லட்சுமிநாராயணன்: பஸ் நிலைய நடை மேம்பாலத்தை ரீமாடல் செய்து தானியங்கி படிக்கட்டு வசதி அமைப்போம். ராஜிவ்காந்தி சதுக்க மேம்பாலம் பணி மேற்கொள்ளும்போது இந்த பணி மேற்கொள்ளப்படும்.