/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மழையால் பாதித்த நெற்பயிர்களை அமைச்சர் நமச்சிவாயம் பார்வை
/
மழையால் பாதித்த நெற்பயிர்களை அமைச்சர் நமச்சிவாயம் பார்வை
மழையால் பாதித்த நெற்பயிர்களை அமைச்சர் நமச்சிவாயம் பார்வை
மழையால் பாதித்த நெற்பயிர்களை அமைச்சர் நமச்சிவாயம் பார்வை
ADDED : ஜன 10, 2024 01:49 AM

திருக்கனுார் :  கைக்கிலப்பட்டு, திருக்கனுார் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதி களை அமைச்சர் நமச்சிவாயம் பார்வையிட்டார்.
மண்ணாடிப்பட்டு தொகுதி, கைக்கிலப்பட்டில் பெய்த கனமழையில் அறுவடைக்கு தயாராக இருந்த 300 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. தகவலறிந்த தொகுதி எம்.எல்.ஏ.,வும், அமைச்சருமான நமச்சிவாயம் நேற்று அப்பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, திருக்கனுாரில் மழையால் கழவுநீர் சேரும் குளம் நிரம்பியதால், குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்த பகுதியை பார்வையிட்டு, தண்ணீரை உடனே வெளியேற்றவும், அந்த பகுதிகளில் தண்ணீர் தேங்காதவாறு நிரந்தர தீர்வு காணவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது, முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன், ஆணையர் எழில்ராஜன், பா.ஜ., நிர்வாகிகள் வீரராகவன், செல்வகுமார், கலியபெருமாள், வேளாண் இணை இயக்குனர் சிவபெருமான், துணை இயக்குனர் ராஜ்குமார் உள்ளிட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
பின்னர் அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையல், 'திருக்கனுார், கைக்கிலப்பட்டு உள்ளிட்ட பல பகுதிகளில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. எவ்வளவு பாதிப்பு என்பது குறித்து கணக்கெடுப்பு செய்து, விரைவில் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
இது சம்மந்தமாக முதல்வருடன் கலந்து பேசி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
விரைவில் வாய்க்கால்கள் துார்வாருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார். பின், முன்னாள் முதல்வர் நாராயணசாமியின் தொடர் ஊழல் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, அமைச்சர் நமச்சிவாயம், உரிய நேரத்தில் உரிய பதில் அளிக்கப்படும்' எனக் கூறினார்.

