/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் போராட்டக்குழு பிரசாரம்
/
நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் போராட்டக்குழு பிரசாரம்
நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் போராட்டக்குழு பிரசாரம்
நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் போராட்டக்குழு பிரசாரம்
ADDED : ஜூன் 26, 2025 11:31 PM

புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களின் கூட்டு போராட்டக்குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெருமுனை பிரசாரம் நேற்று நடந்தது.
அண்ணாசிலை அருகே நடந்த தெருமுனை பிரசாரத்திற்கு, வேளாங்கன்னிதாசன் தலைமை தாங்கினார்.
கலியபெருமாள், அய்யப்பன் முன்னிலை வகித்தனர்.
சகாயராஜ், செல்வம், அய்யப்பன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினர்.
இதில், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தெருமனை பிரசாரத்தில் மத்திய அரசின் 7 வது ஊதியக்குழு பரிந்துரைப்படி, 2016 முதல் 2018 ம் ஆண்டு வரையிலான 33 மாத நிலுவைத் தொகையை வழங்க உத்தரவு வெளியிட வேண்டும். பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அரசு நேரடியாக பென்ஷன் மற்றும் நிலுவைத் தொகைகள் வழங்கிட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
2002ம் ஆண்டு தற்காலிக அந்தஸ்து பெற்ற 232 ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் வழங்கிட வேண்டும். தினக்கூலி ஊழியர்கள் மற்றும் கிராம பஞ்சாயத்து ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.